புதன், 2 ஜூலை, 2014

அந்த நாள்.. ஞாபகம்...(part-8)

 அந்த நாள்.. ஞாபகம்...(part-8)


                                                  ஸ்கைலாப் ராக்கெட் 
                                                 .................................................
                                                                           

                                 முன்பு 1980 க்கு முந்தய  காலத்தில் ஸ்கைலாப் என்றொரு  ராக்கெட் வந்தது நினைவிருக்கிறதா... பலரும் மறந்திருக்கக் கூடும். ஸ்கைலாப் என்ற ஆயுள் தீர்ந்துபோன ராக்கெட் பூமியின் மீது, குறிப்பாக தென்னிந்திய கடலோரம் மோதப் போவதாகவும், அதனால் மனித இனமே இருக்காது என்று செய்திகள் பரவ ஆரம்பித்தன.அவ்வளவுதான்... அதுவரை நீடித்து வந்த பகைகள் நட்பாகின... கஞ்சர்கள் வள்ளல்களானார்கள்... தோட்டத்தில் மேய்ந்த மாடுகளுக்காக பஞ்சாயத்து கூட்டியவர்கள், பட்டியோடு மாட்டை மேய்ச்சிக்கய்யா என தாராளம் காட்டினர்... கூடாத காதல்கள் கூடின... பெரிசுகள் கண்டு கொள்ளாமல் போக ஆரம்பித்தனர். கிராமம் தோறும் பொதுவிருந்து நடத்தி, ஆட்டுக் கறிக் குழம்பும்  சோறும் போட்டனர். அவ்வளவு ஏன், சினிமா கொட்டகைகளில் டிக்கெட்டுக்கு பணம் இல்லேன்னாலும் பரவால்ல போய் பாருய்யா என்றார்கள்... மற்ற மாநிலங்களில் எப்படியோ... மதுரையில்  இவற்றையெல்லாம் கண்கூடாகப் பார்க்க முடிந்தது... இலங்கை வானொலி லைவ் டெலிகாஸ்ட் பண்ணிக்கொண்டு இருந்தது ......எல்லோரும் தத்தமது குடும்பத்தாருடன் தமது வீட்டுக்குள் முடங்கி ஒன்று கூடினர் .இன்னும் ஒருமணி நேரத்தில் ராக்கெட் விழ இருபதும் நினிடதிற்கு ஒருமுறை அறிவிக்கப்பட்டது .....30....நிமிடம்....20...10.....5......என நிமிடங்கள் கரைந்தோட டென்சன் எகிறியது .........எல்லா கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன .........4....3...2...1 நிமிடத்தில் விழும் ...என சொன்ன அறிவிப்பாளர் குரல் கூட தளுதளுத்து ....!!!!அந்தகடைசிஒருநிமிடம்எங்கும்நிசப்தம்...............................................................................................................................................>
  பின் .....ரேடியோ அறிவிப்பாளரின் சந்தோஷ சிரிப்பு குரல் கேட்டது .....ஸ்கைலாப் ராக்கெட் இந்து மகா சமுத்திரத்தில் சுமார் 250 கடல் மைல் தூரத்தில் விழுந்தது  என அறிவிப்பு செய்தார் .எந்த அழிவும் நேராமல் தப்பினோம் அனைவரும் !!!!!!!.    மறக்க முடியுமா அந்த நாளை ??????.
உங்களில் யாருக்கேனும் இந்த அனுபவம் இருந்தால் ....பகிருங்கள் .
@கல்யாண் ராஜன் .

2 கருத்துகள்:

  1. எனக்கு ஞாபகமிருக்குங்க... என் ஊர் பெருந்துறை.. ஈரோட்டுப் பக்கம்..

    ஆச்சரியம் என்னன்னா அந்த நாள்ல சாவு பயம் இல்லாம மக்கள் கறிஞ் சோறு தின்னுட்டு ஜாலியா பேசிச் சிரிச்சுட்டு தாயக்கரம் விளையாண்டுக்கிட்டு இருந்தது தான் !

    ஒரு வேளை... செத்தா பங்கும் பங்காளி, மாமன் மச்சினன்னு எல்லாரோடவும் தானே சாகறோம்ங்கற பரந்த மனப்பான்மையா இருக்குமோ?

    பதிலளிநீக்கு