ஞாயிறு, 13 ஜூலை, 2014

அந்த நாள்.. ஞாபகம்..(part.11)

                                               அந்த நாள்.. ஞாபகம்..(part.11)

                                                   அடி ஒவ்வொன்னும்  இடி
                                                 --------------------------------------------

                      அன்று காலை வீட்டுக்கு சற்றுதொலைவில்   வெளியே என்  பெரியப்பா என்னை கூப்பிட்டு 11 மணி  சினிமா பாக்க  வரையா என கூப்பிட சரி அம்மாட்ட சொல்லிட்டு வருகிறேன் என்றேன் .சும்மா ...வா  நான் சொல்லிகிறேன் என கூறி கூட்டிபோனார் .காலைக்காட்சி டிக்கெட் கிடைக்கவில்லை .சரி சாப்பிட்டுவிட்டு மதியம் போலாம் என இருக்கவைக்க ..........விளையாடிட்டு இருந்தவன காணவில்லை என வீட்டில் தேட ஆரம்பித்தார்கள் .(பெரியப்பா வீட்டுக்கு  தகவல் சொல்ல மறந்துபோனார்  ).
மதியம் படம்  பார்த்துவிட்டு சந்தோசமாய் வீட்டுக்கு வந்தால் எங்கள் தெருவே வெளியில் வந்து கூடி இருந்தது .தெரு முனையில் கொலைவெறியுடன் என்  தாத்தா .....நிற்பதும் ,அருகில் என் குடும்பத் தினர் கண்ணீருடன் வருவதும் தெரிய விபரீதம் உரைத்தது .(போலீஸ்  ஸ்டேஷன் போய்  கம்ப்ளைன்ட் பண்ண கிளம்பிட்டங்கியா   ... கிளம்பிட்டாங்க .........!!!.).எங்கடா  போன என தாத்தா  கேட்க ....சினிமாவுக்கு.... என முடிப்பதற்குள் இடியென அடி .......ஆத்திரம் தீர  வீட்டு வாசல் வரைக்கும் அடி .......வஞ்சகமே இல்லாமல் விழுந்தது .தப்பு என்மேல் என்பதால் வாங்கிக்கொண்டு நின்றேன் .... "அடிவாங்கி கிட்டே நிக்கிற ஓடுடா"   என சொன்ன அம்மாவின் சப்தம் காதில் ஏறவில்லை (தப்பு பண்ணா  அடிவாங்கனும் ....மீறி ஓடினா  அதுக்கு தனி அடி அம்மாவிடம்  கிடைக்கும் ....அந்த  பழக்கம் ).பின் யாரோ என்னை விடுவித்து கூட்டிபோனதாய் நியாபகம் .கோபம் ,இயலாமை, தவறு செய்துவிட்டோம் எண்ற  குற்ற உணர்வு ..... ரோட்டில் எல்லோர் முன்னாலும் அடிவாங்கின அவமானம் ...........அன்று சாப்பிடமல் அழுதுகொண்டே தூங்கிபோனேன் .தாத்தா  மேல் ஆத்திரம் அதிகமாய் வந்தது .இரவு தாத்தா  பிரியாணி பொட்டலத்துடன் வந்துகண்ணீருடன்  சமாதானம் செய்தார் ."கடைக்கு போனவன் சாயங்காலம் வரை காணோம்னா நான் என்ன்னன்னுடா நெனைக்கிறது "-----என கண்கள் பனிக்க தலுதளுதார் .அவரது ஒவ்வொரு அடியும் என் மேல்  கொண்ட பாசத்தின் அளவீடு என்பது  பின்னாளில் தான் அனுபவத்தில் உணரமுடிந்தது .உணர வைத்த என் தாத்தாவுக்கு என் நினைவாஞ்சலி .ஞாபகங்கள் தொடரும் ............@கல்யாண் ராஜன் .
          




                                                    

சனி, 5 ஜூலை, 2014

அந்த நாள்.. ஞாபகம்..(part-9)

                                                 அந்த நாள்.. ஞாபகம்..(part-9)

                                    புதைக்கும்போது கத்திய என் சின்ன பாட்டி                               



                                              அன்று ஒரு நாள் என் தாய்வழி சின்ன பாட்டி  வருடகணக்கில் பக்கவாதத்தில் படுத்தவர் இறந்தார் .காரியம் எல்லாம் முடித்து  பேரன்கள் நாங்கள்  ஆட்டபாட்டதுடன் மயானம் தூக்கி சென்றோம் .ஏற்கனவே சுடுகாடு என்றால் கொஞ்சம் பயம் தான் (நல்லவேளை இரவு இல்லை).பாடையை கீழே வைத்து விட்டு குழி தோண்டும் பணி நடைபெற்று முடிந்தது .பாட்டியின் உடலை உள்ளே வைக்க எண்ணி  பெரியவர் ஒருவர் "வாங்கப்பா ...பேரன்களா  வந்து தூக்கி வையுங்க என்றதும்  நானும் எனது தம்பி,மற்றும் மாப்பிளைகள் இரண்டுபேரும் ஆளுக்கு ஒரு பக்கம் தூக்கி குழிக்குள் வைக்கும் முன் .................
............................................................."..ஹ்ஹ்ஹ்ஹூஊஒ  'என்ற சப்தம் பாட்டியின் வாயிலிருந்து கெட்ட  நாற்றத்துடன் பயங்கர சப்தம் பெரிதாய் வர .........அப்படியே தொப்பென போட்டுவிட்டு 4 பேரும் குப்பென வேர்க்க .......... ஓடினோம் ஓட்டம் ........புளிதி பிடரியில் பட ....!!!!!அன்று தான் பயத்தில் தொடை "என்னை மீறி "நடுங்கியதை உணர்ந்தேன் !!!!(யோசிச்சு பாருங்கள் ...பாட்டிக்கு எத்துபல் வேறு ....பிணமாய் கத்தினால் எப்படி இருக்கும்).......என்ன என்ன என்று அனைவரும் ஓடிவந்து எங்களை பிடித்து கேட்க பயத்தில் உளறி உளறி சொல்ல .....பெருசுகள் சிரித்தார்கள் .விவரமான ஒருத்தர்சொன்னார் ... வயத்தில் உள்ள காற்று.. பசங்க தூக்கினதும் அமுங்கி ...ப்ரசெர்ல வரும்போது வாய் வழியா  சத்தம்  வரும் .....பயப்படாம தூக்கி குழியில் வைங்க என்றார். .அப்பாடா  என்று ஒருவழியாக  குழியில் வைத்தோமா .......நாங்களும் பிழைத்தோம் .பாவம் என்  மாப்பிள்ளை ஒருவன்தான் முகம் அருகில் இருந்து  தூக்கியதால் காற்று முகத்தில் பட்டு நாற்றம் பொறுக்கமுடியாமல் வாந்தி பண்ணிக்கொண்டு இருந்தார் .இப்போதும்  சுடுகாடு வழியாக  போனால் இந்த ஞாபகம் தான் முதலில் வரும் .  உங்களுக்கும் இதுபோன்ற அனுபவம் இருந்தால் ...பகிருங்கள் .   @கல்யாண் ராஜன் .

புதன், 2 ஜூலை, 2014

அந்த நாள்.. ஞாபகம்...(part-8)

 அந்த நாள்.. ஞாபகம்...(part-8)


                                                  ஸ்கைலாப் ராக்கெட் 
                                                 .................................................
                                                                           

                                 முன்பு 1980 க்கு முந்தய  காலத்தில் ஸ்கைலாப் என்றொரு  ராக்கெட் வந்தது நினைவிருக்கிறதா... பலரும் மறந்திருக்கக் கூடும். ஸ்கைலாப் என்ற ஆயுள் தீர்ந்துபோன ராக்கெட் பூமியின் மீது, குறிப்பாக தென்னிந்திய கடலோரம் மோதப் போவதாகவும், அதனால் மனித இனமே இருக்காது என்று செய்திகள் பரவ ஆரம்பித்தன.அவ்வளவுதான்... அதுவரை நீடித்து வந்த பகைகள் நட்பாகின... கஞ்சர்கள் வள்ளல்களானார்கள்... தோட்டத்தில் மேய்ந்த மாடுகளுக்காக பஞ்சாயத்து கூட்டியவர்கள், பட்டியோடு மாட்டை மேய்ச்சிக்கய்யா என தாராளம் காட்டினர்... கூடாத காதல்கள் கூடின... பெரிசுகள் கண்டு கொள்ளாமல் போக ஆரம்பித்தனர். கிராமம் தோறும் பொதுவிருந்து நடத்தி, ஆட்டுக் கறிக் குழம்பும்  சோறும் போட்டனர். அவ்வளவு ஏன், சினிமா கொட்டகைகளில் டிக்கெட்டுக்கு பணம் இல்லேன்னாலும் பரவால்ல போய் பாருய்யா என்றார்கள்... மற்ற மாநிலங்களில் எப்படியோ... மதுரையில்  இவற்றையெல்லாம் கண்கூடாகப் பார்க்க முடிந்தது... இலங்கை வானொலி லைவ் டெலிகாஸ்ட் பண்ணிக்கொண்டு இருந்தது ......எல்லோரும் தத்தமது குடும்பத்தாருடன் தமது வீட்டுக்குள் முடங்கி ஒன்று கூடினர் .இன்னும் ஒருமணி நேரத்தில் ராக்கெட் விழ இருபதும் நினிடதிற்கு ஒருமுறை அறிவிக்கப்பட்டது .....30....நிமிடம்....20...10.....5......என நிமிடங்கள் கரைந்தோட டென்சன் எகிறியது .........எல்லா கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன .........4....3...2...1 நிமிடத்தில் விழும் ...என சொன்ன அறிவிப்பாளர் குரல் கூட தளுதளுத்து ....!!!!அந்தகடைசிஒருநிமிடம்எங்கும்நிசப்தம்...............................................................................................................................................>
  பின் .....ரேடியோ அறிவிப்பாளரின் சந்தோஷ சிரிப்பு குரல் கேட்டது .....ஸ்கைலாப் ராக்கெட் இந்து மகா சமுத்திரத்தில் சுமார் 250 கடல் மைல் தூரத்தில் விழுந்தது  என அறிவிப்பு செய்தார் .எந்த அழிவும் நேராமல் தப்பினோம் அனைவரும் !!!!!!!.    மறக்க முடியுமா அந்த நாளை ??????.
உங்களில் யாருக்கேனும் இந்த அனுபவம் இருந்தால் ....பகிருங்கள் .
@கல்யாண் ராஜன் .