ஞாயிறு, 29 ஜூன், 2014

அந்த நாள்.. ஞாபகம்...(part-7)

 அந்த நாள்.. ஞாபகம்...(part-7)
                                                    
                                         

                                            ​​​​​​​​​​​​​​​​         பூனை மீசை வயது

                                               அது ஒரு இரண்டும்கெட்டான் பருவம் ....ஒன்பதாம் வகுப்பின் சரித்திர பாடம் எடுக்கும் இளம் ஆசிரியை வழக்கமாக பாடம் எடுத்து கொடிருக்க ,நான் இப்போ அப்போ வென விழ தயாராய் இருந்த முன் பல்லை நாவினால் ஆட்டிக்கொண்டே கவனித்து கொண்டிருந்தேன் .என்ன தோன்றியதோ அந்த ஆசிரியை பாடம் எடுப்பதை சற்று நிறுத்தி என்னை முறைத்து விட்டு தொடர்ந்தார் .மேலும் இரண்டு முறை இது தொடர்ந்தது .மூன்றாம் முறை .....முறைத்தவர் .....அருகில் வந்து  கன்னத்தில் விட்டார் ஒரு அறை .எனக்கு ஒன்றும் புரியவில்லை ,இவர் ஏன் இப்படி கோபத்துடன் முறைத்தார் ...இப்போது அடிக்கவேறு செய்கிறார் ?....அவமானம் மற்றும் கண்ணீருடன் கன்னத்தில் கைவைத்து ஏன் டீச்சர் அடிகிறிர்கள் என கேட்க .....ஏன் அடிச்சேன்னு உனக்கு தெரியல? உட்கார் என்றார் கோபத்துடன் .சில வினாடிகளில் நாக்கில் ரத்த சுவை உரைக்க ...ஆடிகொண்டிருந்த பல் விழுந்திருந்தது .!டீச்சர் அருகில் பயந்தபடி போய் "பல் விழுந்திருச்சு " என்றதும் ......அவருக்கு அப்போதுதான் உரைத்தது .பல் ஆடிச்சா ..அதான் அப்படி உதடு குவித்து பல் ஆட்டிகிட்டு இருந்தயா ?எனக்கேட்டு மிக வருத்தப்பட்டு ,நல்ல பையந்தண்டா நீ என கூறி ........மன்னிப்பும் கேட்டார் .என் செய்கை அவருக்கு "முத்த" சைகையாக தவறுதலாக கவனிக்கப்பட்டது தான் அந்த அடிக்கு காரணம் என்று பின்னர் நண்பர்கள் தெளிவாக்கிய பின் தான் புரிந்தது .பத்து நாள் கழிச்சு விழ வேண்டிய பல் அடிச்ச  அடியில் சட்டென விழுந்தது ஒன்று தான் அன்றைய சிறப்பான பலன் .
உங்களுக்கும் இதுபோல் நினைவு அலை தோன்றினால் பகிருங்களேன் .!!!!
@கல்யாண் ராஜன் .



வியாழன், 26 ஜூன், 2014

அந்த நாள்.. ஞாபகம்...(part-6)

                                                    அந்த நாள்.. ஞாபகம்...(part-6)
                                

                                                    பள்ளிகூட இடைவேளை

                                                                          













                                         அப்பாடா .......15 நிமிடம் நிம்மதி ...என பள்ளிவிட்டு வெளி வந்து சந்தோசமா பொட்டிக்கடையில் தஞ்சம் புகும் நேரம் சொர்கத்தின் ஒரு பகுதி .அந்த நாட்களில் சாக்லேட் ,5 ஸ்டார் ,கிட்கேட் ,,,etc ...கிடையாது .உடல் ஆரோக்கிய கடலை மிட்டாய் ,கோகோ மிட்டாய் ,தேன் மிட்டாய் ,மாங்காய் ,நெல்லிக்காய் ,புளி உருண்டை .......பொறி உருண்டை .......ஜிகேர்தண்டா ....என கிடைக்கும் பாக்கெட் மணிக்கு தகுந்தாற்போல் நொறுக்குவதில் ...........உள்ள சுகமே அலாதி !!!! நெல்லிக்காய் கடித்து அதை அறைவட்டமாக மாற்றும் திறமைசாலிகள் பலர் உண்டு .சவ்வரிசி ஐஸ் கடித்து நண்பனுடன் பகிர்ந்த நிமிடங்கள் இன்றும் மனதில் நீங்கவில்லை .அப்போதே அந்த பொட்டிகடைகளில் acount வைத்த திறமைசாலி பசங்கள் ........ஜாமின்றி பாக்ஸ் இல் இருந்து மாங்காய் கடித்து தெரியாமல் கொடுத்த பெண் தோழிகள் .......பசி பொறுக்காமல் மதிய உணவுக்கு முன்பே டிபன் பாக்ஸ் திறந்து தின்று வாசனை காட்டிகொடுத்து மாட்டி  அடி வாங்கின நாட்கள் .......அந்த நாள் ஞாபகம் ....நெஞ்சிலே வந்ததே .........என பாடதோன்றும் ......நாவில்  அந்த இனிப்பு சுவை ஜொல்லோடு .........!!!!!!  உங்களுக்கு இது நடந்து இருந்தால் பகிருங்களேன் . @கல்யாண் ராஜன் .

திங்கள், 23 ஜூன், 2014

அந்த நாள்.. ஞாபகம்.......5

அந்த நாள்.. ஞாபகம்.......5
                                              சனி நீராடு 
 

         நம் தந்தை காலம் வரை சனிகிழமை என்னை குளியல் பார்த்திருப்போம் .நமக்கு அதற்கான நேரம் கிடையாது .ஆனால் அதன் பலன் மிக அதிகம் . இன்றைய இளைய தலைமுறையினர் பலர் எண்ணெய் தேய்த்து குளிப்பார்களா என்பது சந்தேகம் தான். நம் முன்னோர்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிமுறைகளை சொல்லி உள்ளனர். அதில் முக்கியமான ஒன்று எண்ணெய் குளியல்.  ஒரு 15 வருடங்களுக்கு முன் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்பது நமது கிராமங்களில் சனிக்கிழமை அன்று எண்ணெய் குளியல் நிறைய வீடுகளில் நடக்கும் இன்று அது அரிதாகி விட்டது. தீபாவளி அன்று தான் நம் வீட்டில் எண்ணெய் தேய்த்துக் குளியல் நடக்கும் ஆனால் அதன் முழுப்பயனும் அன்று ஒரு நாள் மட்டும் குளித்தால் நடக்குமா? நிச்சயம் நன்மை இருக்காது.‘‘எண்ணெய் குளியல் உடலுக்கு மட்டுமின்றி, உள்ளத்துக்கும் பல நன்மைகளைக் கொடுக்கக்கூடியது.

        மருத்துவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் எந்த நன்மையும் இல்லை என்று சொல்கிறார்கள். அதனால் எண்ணெய்க்கும் கேடு; நேரமும் வீணாகிறது என்கிறார்கள். ஆனால் அதில் உண்மையில்லை.குறிப்பாக பிரிட்டன் போன்ற வெளிநாட்டில் உள்ள மருத்துவர்கள் இப்படிக் கூறுகிறார்கள். வெளிநாட்டு மருத்துவர்களின் பேச்சை அப்படியே நம் நாட்டில் உள்ள சில மருத்துவர்கள் நம்பிவிடுகிறார்கள்.

உண்மையில் எண்ணெய்க் குளியல் என்பது உடலின் சூட்டைத் தணிப்பதற்காக நமது நாட்டில் நமது முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு சிறந்தமுறை. அதுவும் அதிக வெப்பமுள்ள நமது நாட்டில் ஏற்பட்டுள்ள முறை. நமது நாட்டில் போல பிரிட்டனில் வேனல் கட்டிகள் வருமா? இல்லை வியர்க்கத்தான் செய்யுமா? எனவே பிரிட்டனில் உள்ள மருத்துவர்கள் எண்ணெய்க் குளியலின் பலன்களைப் பற்றித் தெரிந்து கொள்ளாமற் இருப்பதில் எந்த வியப்பும் இல்லை.
எண்ணெய்க் குளியலின் பலன்
உடல் புத்துணர்ச்சி பெறும்
உடலில் உள்ள நரம்புகள் செயல்பாடு அதிகரிக்கும்
திருமணம் ஆன தம்பதிகளுக்கு இல்லற இன்பம் அதிகரிக்கும் (இதற்காகத்தான் திருமணம் ஆன இரண்டு நாட்கள் கழித்து எண்ணெய் தேய்த்து விருந்து வைக்கின்றனர்)
சளி தலைவலி தொல்லையில் இருந்து விடுபடலாம்
ஆரோக்கியமான தூக்கத்திற்கு வழி வகுக்கும்
கடுமையான வேலை, டென்ஷனுக்குப் பின், நம்ம உடம்பை ரிலாக்ஸ் பண்றதுக்கு ஒரு சிறந்த தீர்வு.( இப்போதும் என் தாத்தாவின் சாவகாசமான என்னைகுளியல் கண் முன் நிழலாடும் .இதெல்லாம் அனுபவிச்சாதான் தெரியும்

                                                   --

வெள்ளி, 20 ஜூன், 2014

அந்த நாள்.. ஞாபகம்.......part-4

                                                              அதிகாலை  மார்கழி குளிர் .
                                                             ---------------------------------------

                 காலை மூன்று மணிக்கு மேலே மார்கழி மாசம் அடிக்கும் குளிரை அனுபவித்து  இருக்கிறீர்களா ? சிறிய தீ வளர்த்து குளிர் காயும் சுகம் தெரியுமா உங்களுக்கு? அனுபவித்தால் தெரியும் அதன் சுகம் !!!.அன்றைய வயதில் தெருவில் உள்ள நண்பர்களுடன் பழக எனக்கு பெற்றோர்  தடை உண்டு .(கண்டபசன்களோட சேர்ந்தா கெட்டு போவனாம் ). அந்த மார்கழி குளிருக்கு அங்குள்ள என் வயது  பசங்கள் ஐந்தாறு பேர் சேர்ந்து அங்குள்ள WORKSHOP கழிவு துணிகளை  (கிரீஸ் .DEISEL ,துடைத்த தீ பற்ற கூடியது . )சேகரித்து வந்து வட்டமாய் அமர்ந்து அதை எரித்து சுகமாய் குளிர் காய்வார்கள் .துணி பொறுக்கி வரதவர்க்கு அங்கே அனுமதி இல்லை .என்னால் அந்த நண்பர்களை நான் சற்று தள்ளி நின்று வேடிக்கை மட்டுமே பார்க்கமுடியும் .(அப்பா திட்டுவாங்களே ).ஆனாலும் அவர்கள் என்னை அழைப்பார்கள் .......வாடா ..நீ கிரீஸ் துணியெல்லாம் பொறுக்கி  தரவேண்டாம் ...சும்மா ஒக்கொந்துகோடா ....ஒன்னும் ஒன்னய சொல்லமாட்டோம் ..எங்க கூட நீ இருந்தாலே   எங்களுக்கு சந்தோசம் என்பார்கள் .பெற்றோர் தடை அந்த அன்பில் உடைபட அருகில் அமர்ந்து  மகிழ்ச்சியுடன் குளிர் காய்ந்து வருவேன் திருட்டுத்தனமாக .....இன்றும் அந்த அன்பையும் நட்பையும் கூதல் மார்கழியின் போது நினைத்தால் மனது பூரிக்கும்  .மீண்டும் அந்தநாள் வராதா என என்னும் ......!!!!!!.
இன்றைய குழந்தைகள் இதை அறிவார்களா ?இல்லை அதற்க்கு நேரம் தான் இருகிறதா  ?   .....உங்களுக்கும் இந்த அனுபவம் இருக்கலாம் !பகிருங்கள் நண்பர்களே >>>>!.    @கல்யாண் ராஜன் .



                                             

ஞாயிறு, 15 ஜூன், 2014

அந்த நாள்.. ஞாபகம்.......part-3

       

                                                 சித்திரை திருவிழா திரு திரு 



                                       

                                        மதுரை சித்திரை திருவிழா ....அழகர் ஆற்றில் இறங்குவதை பார்க்க குடும்பத்துடன் புறப்பட்டோம் .என்  தாத்தா  ராசு பிள்ளை மிகவும் கண்டிப்பு .அவர் தலைமையில் பின்தொடர்ந்து நாங்கள் கிளம்பினோம் . .டேய் கூட்டத்துல தொலஞ்சு போயிராதீங்க .அப்டி போய்ட்டா போலீஸ் கிட்ட சொல்லி அழாம இருக்கனும் .நான் வந்து கூடிபோவேன் என  அட்வைஸ் உடன் மோர்......பாணகரம் ....(அதுதாங்க கருப்பட்டி,புளி சாரு கலந்த பாணகம் ) குடித்து கொண்டே (இலவசமாச்சே ) போய்  சேர்ந்தோம் .செம கூட்டம். அழகர் தரிசனம் முடித்து  (எங்க அழகர பார்த்தோம் ....அழகருக்கு பக்கத்தில இருந்த பட்டர்தான் பார்த்தோம் .ரொம்ப நாளா  அவரத்ததான்  அழகருன்னே நினச்சிருந்தேன் ).தாத்தா ஒரு கருப்பு குடை  விருச்சு உயர்த்தி  சொன்னார் ....ஏ புள்ளைகளா இந்த கொடைய பார்த்துட்டே ஏன் பின்னாடி வாங்க அக்கறைக்கு போயிறலாம் என புறப்பட்டார் .தாத்தா குடைய பின்தொடர்ந்து கொஞ்ச தூரம் போன போது .......1  2 3  4...என பல குடை விரிந்து (அதுவும் கருப்பு தான்)கண்ணில் பட்டு போய்கொண்டு இருக்க ......போன எல்லாரும் ஒருசிலரை தவிர தாத்தாவை விட்டு வேறு யாருடனோ வந்துவிட்டது தெரிந்து  திரு திரு வென்று விழித்தோம் .(வீட்டுக்கு வர வழி  தெரியும் ..but  தாத்தாட்ட திட்டு வாங்கணுமே அத யாரு வாங்கிறது ?) .என்னை அந்தவயதிலும் தோளில் உக்கார வைத்து தலை முடிய பிடிக்கசொல்லி ,வலி பொருத்து  அழகர் பார்க்க வைத்த தாத்தாவை இபபோ நினைத்தாலும்  ....கண்களில் ஆனந்தகண்ணீர் ....!!!!!.இது போன்ற பீல் உங்களுக்கும் இருந்தால் .......பகிருங்கள் நண்பர்களே...!

@ கல்யாண் ராஜன்




.

சனி, 14 ஜூன், 2014

அந்த நாள்.. ஞாபகம்.......part- 2.


அந்த நாள்.. ஞாபகம்.......part -2.  



                                                       புட்டு திருவிழா  
                                                                          
            சிறு வயதில் என்  வீடு அருகே (ஆரப்பாளையம் கிராஸ் ) புட்டு தோப்பு என்ற ஒருஇடம்  உண்டு .ஒரு கோவில் ,நந்தவனம்,அருகில் வைகை நதியின் ஆற்றுக்கரை, அரசம் ,வேம்பு,பந்துக்கா மரம் (டென்னிஸ் பந்து போன்ற காய் இதன் சிறப்பு)........இப்படி ரம்மியமான இடத்தில் சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியான 'பிட்டுக்கு மண் சுமந்த படலம் 'நடைபெறும் .இரண்டு நாள்களுக்கு முன்பே தூக்கம் வராது  எங்களுக்கு அப்படி ஒரு சந்தோசம் .பின்னே அந்தமூன்று நாளும் ஸ்கூல் லீவு ஆச்சே .முதல்நாளே யானை,ஒட்டகம் ,காளைமாடு வந்துவிடும் .புட்டு கடை ,ராட்டினம் ,பலூன் கடைகள் ,பொம்மலாட்டம் ,மிட்டாய் கடைகள் என களைகட்டும் (கால ஓட்டத்தில் இப்போதெல்லாம் இது மறைந்து விட்டது. இன்றைய கம்ப்யூட்டர் கேம்  குழந்தைகளுக்கு இது ஒரு அனுபவ இழப்பு ).அங்கேயே சந்தோசமாக நண்பர்களுடன் விளையாடி ,யானை சாணம்  போடுவதை ரசித்து பார்த்து ,அதை மிதி மிதி என மிதித்து (காலில் புண் வரதுடா -நண்பர்கள் )ஒட்டகத்திற்கு உணவு கொடுத்து அதன் சொரசொர நாக்கின் வருடலை உணர்ந்து  ,ராட்டினம் சுற்றி , ......ஆனந்தம் ஆனந்தம்  தான் .இத்திருவிழா அன்று இரவு சுவாமி சப்பரத்தில் சுற்றி வரும் .பஸ் போக்குவரத்து மாற்றிவிடப்படும் அளவுக்கு கூட்டம் அலைமோதும் .பல இளவட்டங்களுக்கு girlfriends  செட் ஆவது அங்கே அன்று நடக்கும் .இப்போது அப்படி ஒரு விழா நடப்பது போகிறபோக்கில் என்ற அளவுக்கு ஆகிவிட்டது என்பது எனக்கு வருத்தமான ஒன்று தான் .இந்த அனுபவம் உங்களில் ஒளிந்து இருந்தால் பகிருங்களேன்.
( .அந்த நாள்.. ஞாபகம்.....தொடரும் )


@கல்யாண் ராஜன் .