திங்கள், 23 ஜூன், 2014

அந்த நாள்.. ஞாபகம்.......5

அந்த நாள்.. ஞாபகம்.......5
                                              சனி நீராடு 
 

         நம் தந்தை காலம் வரை சனிகிழமை என்னை குளியல் பார்த்திருப்போம் .நமக்கு அதற்கான நேரம் கிடையாது .ஆனால் அதன் பலன் மிக அதிகம் . இன்றைய இளைய தலைமுறையினர் பலர் எண்ணெய் தேய்த்து குளிப்பார்களா என்பது சந்தேகம் தான். நம் முன்னோர்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிமுறைகளை சொல்லி உள்ளனர். அதில் முக்கியமான ஒன்று எண்ணெய் குளியல்.  ஒரு 15 வருடங்களுக்கு முன் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்பது நமது கிராமங்களில் சனிக்கிழமை அன்று எண்ணெய் குளியல் நிறைய வீடுகளில் நடக்கும் இன்று அது அரிதாகி விட்டது. தீபாவளி அன்று தான் நம் வீட்டில் எண்ணெய் தேய்த்துக் குளியல் நடக்கும் ஆனால் அதன் முழுப்பயனும் அன்று ஒரு நாள் மட்டும் குளித்தால் நடக்குமா? நிச்சயம் நன்மை இருக்காது.‘‘எண்ணெய் குளியல் உடலுக்கு மட்டுமின்றி, உள்ளத்துக்கும் பல நன்மைகளைக் கொடுக்கக்கூடியது.

        மருத்துவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் எந்த நன்மையும் இல்லை என்று சொல்கிறார்கள். அதனால் எண்ணெய்க்கும் கேடு; நேரமும் வீணாகிறது என்கிறார்கள். ஆனால் அதில் உண்மையில்லை.குறிப்பாக பிரிட்டன் போன்ற வெளிநாட்டில் உள்ள மருத்துவர்கள் இப்படிக் கூறுகிறார்கள். வெளிநாட்டு மருத்துவர்களின் பேச்சை அப்படியே நம் நாட்டில் உள்ள சில மருத்துவர்கள் நம்பிவிடுகிறார்கள்.

உண்மையில் எண்ணெய்க் குளியல் என்பது உடலின் சூட்டைத் தணிப்பதற்காக நமது நாட்டில் நமது முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு சிறந்தமுறை. அதுவும் அதிக வெப்பமுள்ள நமது நாட்டில் ஏற்பட்டுள்ள முறை. நமது நாட்டில் போல பிரிட்டனில் வேனல் கட்டிகள் வருமா? இல்லை வியர்க்கத்தான் செய்யுமா? எனவே பிரிட்டனில் உள்ள மருத்துவர்கள் எண்ணெய்க் குளியலின் பலன்களைப் பற்றித் தெரிந்து கொள்ளாமற் இருப்பதில் எந்த வியப்பும் இல்லை.
எண்ணெய்க் குளியலின் பலன்
உடல் புத்துணர்ச்சி பெறும்
உடலில் உள்ள நரம்புகள் செயல்பாடு அதிகரிக்கும்
திருமணம் ஆன தம்பதிகளுக்கு இல்லற இன்பம் அதிகரிக்கும் (இதற்காகத்தான் திருமணம் ஆன இரண்டு நாட்கள் கழித்து எண்ணெய் தேய்த்து விருந்து வைக்கின்றனர்)
சளி தலைவலி தொல்லையில் இருந்து விடுபடலாம்
ஆரோக்கியமான தூக்கத்திற்கு வழி வகுக்கும்
கடுமையான வேலை, டென்ஷனுக்குப் பின், நம்ம உடம்பை ரிலாக்ஸ் பண்றதுக்கு ஒரு சிறந்த தீர்வு.( இப்போதும் என் தாத்தாவின் சாவகாசமான என்னைகுளியல் கண் முன் நிழலாடும் .இதெல்லாம் அனுபவிச்சாதான் தெரியும்

                                                   --

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக