ஞாயிறு, 29 ஜூன், 2014

அந்த நாள்.. ஞாபகம்...(part-7)

 அந்த நாள்.. ஞாபகம்...(part-7)
                                                    
                                         

                                            ​​​​​​​​​​​​​​​​         பூனை மீசை வயது

                                               அது ஒரு இரண்டும்கெட்டான் பருவம் ....ஒன்பதாம் வகுப்பின் சரித்திர பாடம் எடுக்கும் இளம் ஆசிரியை வழக்கமாக பாடம் எடுத்து கொடிருக்க ,நான் இப்போ அப்போ வென விழ தயாராய் இருந்த முன் பல்லை நாவினால் ஆட்டிக்கொண்டே கவனித்து கொண்டிருந்தேன் .என்ன தோன்றியதோ அந்த ஆசிரியை பாடம் எடுப்பதை சற்று நிறுத்தி என்னை முறைத்து விட்டு தொடர்ந்தார் .மேலும் இரண்டு முறை இது தொடர்ந்தது .மூன்றாம் முறை .....முறைத்தவர் .....அருகில் வந்து  கன்னத்தில் விட்டார் ஒரு அறை .எனக்கு ஒன்றும் புரியவில்லை ,இவர் ஏன் இப்படி கோபத்துடன் முறைத்தார் ...இப்போது அடிக்கவேறு செய்கிறார் ?....அவமானம் மற்றும் கண்ணீருடன் கன்னத்தில் கைவைத்து ஏன் டீச்சர் அடிகிறிர்கள் என கேட்க .....ஏன் அடிச்சேன்னு உனக்கு தெரியல? உட்கார் என்றார் கோபத்துடன் .சில வினாடிகளில் நாக்கில் ரத்த சுவை உரைக்க ...ஆடிகொண்டிருந்த பல் விழுந்திருந்தது .!டீச்சர் அருகில் பயந்தபடி போய் "பல் விழுந்திருச்சு " என்றதும் ......அவருக்கு அப்போதுதான் உரைத்தது .பல் ஆடிச்சா ..அதான் அப்படி உதடு குவித்து பல் ஆட்டிகிட்டு இருந்தயா ?எனக்கேட்டு மிக வருத்தப்பட்டு ,நல்ல பையந்தண்டா நீ என கூறி ........மன்னிப்பும் கேட்டார் .என் செய்கை அவருக்கு "முத்த" சைகையாக தவறுதலாக கவனிக்கப்பட்டது தான் அந்த அடிக்கு காரணம் என்று பின்னர் நண்பர்கள் தெளிவாக்கிய பின் தான் புரிந்தது .பத்து நாள் கழிச்சு விழ வேண்டிய பல் அடிச்ச  அடியில் சட்டென விழுந்தது ஒன்று தான் அன்றைய சிறப்பான பலன் .
உங்களுக்கும் இதுபோல் நினைவு அலை தோன்றினால் பகிருங்களேன் .!!!!
@கல்யாண் ராஜன் .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக