ஞாயிறு, 13 ஜூலை, 2014

அந்த நாள்.. ஞாபகம்..(part.11)

                                               அந்த நாள்.. ஞாபகம்..(part.11)

                                                   அடி ஒவ்வொன்னும்  இடி
                                                 --------------------------------------------

                      அன்று காலை வீட்டுக்கு சற்றுதொலைவில்   வெளியே என்  பெரியப்பா என்னை கூப்பிட்டு 11 மணி  சினிமா பாக்க  வரையா என கூப்பிட சரி அம்மாட்ட சொல்லிட்டு வருகிறேன் என்றேன் .சும்மா ...வா  நான் சொல்லிகிறேன் என கூறி கூட்டிபோனார் .காலைக்காட்சி டிக்கெட் கிடைக்கவில்லை .சரி சாப்பிட்டுவிட்டு மதியம் போலாம் என இருக்கவைக்க ..........விளையாடிட்டு இருந்தவன காணவில்லை என வீட்டில் தேட ஆரம்பித்தார்கள் .(பெரியப்பா வீட்டுக்கு  தகவல் சொல்ல மறந்துபோனார்  ).
மதியம் படம்  பார்த்துவிட்டு சந்தோசமாய் வீட்டுக்கு வந்தால் எங்கள் தெருவே வெளியில் வந்து கூடி இருந்தது .தெரு முனையில் கொலைவெறியுடன் என்  தாத்தா .....நிற்பதும் ,அருகில் என் குடும்பத் தினர் கண்ணீருடன் வருவதும் தெரிய விபரீதம் உரைத்தது .(போலீஸ்  ஸ்டேஷன் போய்  கம்ப்ளைன்ட் பண்ண கிளம்பிட்டங்கியா   ... கிளம்பிட்டாங்க .........!!!.).எங்கடா  போன என தாத்தா  கேட்க ....சினிமாவுக்கு.... என முடிப்பதற்குள் இடியென அடி .......ஆத்திரம் தீர  வீட்டு வாசல் வரைக்கும் அடி .......வஞ்சகமே இல்லாமல் விழுந்தது .தப்பு என்மேல் என்பதால் வாங்கிக்கொண்டு நின்றேன் .... "அடிவாங்கி கிட்டே நிக்கிற ஓடுடா"   என சொன்ன அம்மாவின் சப்தம் காதில் ஏறவில்லை (தப்பு பண்ணா  அடிவாங்கனும் ....மீறி ஓடினா  அதுக்கு தனி அடி அம்மாவிடம்  கிடைக்கும் ....அந்த  பழக்கம் ).பின் யாரோ என்னை விடுவித்து கூட்டிபோனதாய் நியாபகம் .கோபம் ,இயலாமை, தவறு செய்துவிட்டோம் எண்ற  குற்ற உணர்வு ..... ரோட்டில் எல்லோர் முன்னாலும் அடிவாங்கின அவமானம் ...........அன்று சாப்பிடமல் அழுதுகொண்டே தூங்கிபோனேன் .தாத்தா  மேல் ஆத்திரம் அதிகமாய் வந்தது .இரவு தாத்தா  பிரியாணி பொட்டலத்துடன் வந்துகண்ணீருடன்  சமாதானம் செய்தார் ."கடைக்கு போனவன் சாயங்காலம் வரை காணோம்னா நான் என்ன்னன்னுடா நெனைக்கிறது "-----என கண்கள் பனிக்க தலுதளுதார் .அவரது ஒவ்வொரு அடியும் என் மேல்  கொண்ட பாசத்தின் அளவீடு என்பது  பின்னாளில் தான் அனுபவத்தில் உணரமுடிந்தது .உணர வைத்த என் தாத்தாவுக்கு என் நினைவாஞ்சலி .ஞாபகங்கள் தொடரும் ............@கல்யாண் ராஜன் .
          




                                                    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக