சித்திரை திருவிழா திரு திரு

மதுரை சித்திரை திருவிழா ....அழகர் ஆற்றில் இறங்குவதை பார்க்க குடும்பத்துடன் புறப்பட்டோம் .என் தாத்தா ராசு பிள்ளை மிகவும் கண்டிப்பு .அவர் தலைமையில் பின்தொடர்ந்து நாங்கள் கிளம்பினோம் . .டேய் கூட்டத்துல தொலஞ்சு போயிராதீங்க .அப்டி போய்ட்டா போலீஸ் கிட்ட சொல்லி அழாம இருக்கனும் .நான் வந்து கூடிபோவேன் என அட்வைஸ் உடன் மோர்......பாணகரம் ....(அதுதாங்க கருப்பட்டி,புளி சாரு கலந்த பாணகம் ) குடித்து கொண்டே (இலவசமாச்சே ) போய் சேர்ந்தோம் .செம கூட்டம். அழகர் தரிசனம் முடித்து (எங்க அழகர பார்த்தோம் ....அழகருக்கு பக்கத்தில இருந்த பட்டர்தான் பார்த்தோம் .ரொம்ப நாளா அவரத்ததான் அழகருன்னே நினச்சிருந்தேன் ).தாத்தா ஒரு கருப்பு குடை விருச்சு உயர்த்தி சொன்னார் ....ஏ புள்ளைகளா இந்த கொடைய பார்த்துட்டே ஏன் பின்னாடி வாங்க அக்கறைக்கு போயிறலாம் என புறப்பட்டார் .தாத்தா குடைய பின்தொடர்ந்து கொஞ்ச தூரம் போன போது .......1 2 3 4...என பல குடை விரிந்து (அதுவும் கருப்பு தான்)கண்ணில் பட்டு போய்கொண்டு இருக்க ......போன எல்லாரும் ஒருசிலரை தவிர தாத்தாவை விட்டு வேறு யாருடனோ வந்துவிட்டது தெரிந்து திரு திரு வென்று விழித்தோம் .(வீட்டுக்கு வர வழி தெரியும் ..but தாத்தாட்ட திட்டு வாங்கணுமே அத யாரு வாங்கிறது ?) .என்னை அந்தவயதிலும் தோளில் உக்கார வைத்து தலை முடிய பிடிக்கசொல்லி ,வலி பொருத்து அழகர் பார்க்க வைத்த தாத்தாவை இபபோ நினைத்தாலும் ....கண்களில் ஆனந்தகண்ணீர் ....!!!!!.இது போன்ற பீல் உங்களுக்கும் இருந்தால் .......பகிருங்கள் நண்பர்களே...!
@ கல்யாண் ராஜன்
.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக